சிலம்பம்போட்டியில் சாதனைமாணவ-மாணவிகளுக்கு பாராட்டு


சிலம்பம்போட்டியில் சாதனைமாணவ-மாணவிகளுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆழ்வார்திருநகரியில் சிலம்பம்போட்டியில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தென்திருப்பேரை:

அந்தமானில் கடந்த டிச.10-ந்தேதி சர்வதேச அளவிலான சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலைகள் போட்டி நடைபெற்றது. இதில் சிலம்பாட்டம் மற்றும் தனித்திறன் போட்டிகளான ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, ஒற்றை சுருள்வால், ரெட்டை சுருள்வால், குத்துவரிசை, வேல் கம்பு, ஒற்றை வால், இரட்டைவால், மான் கொம்பு சண்டை, சுவடு அடிமுறை ஆகிய 11 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், கோல்ட் ஸ்டார் சிலம்பம் பயிற்சி பள்ளியில் படித்த ஆழ்வார்திருநகரி பகுதிகளை சேர்ந்த டிலன், ஸ்ரீ சந்தோஷ், விஜய், பத்மநாபன், சுபாஷ் ஆகிய மாணவர்களும், சரோஜினி, எமிலி தனுஷ்கா, முருகேஸ்வரி, மகா சரண்யா ஆகிய மாணவிகளும் சர்வதேச அளவில் 9 தங்கப் பதக்கங்களும், 7 வெள்ளி பதக்கங்களும், 2 வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனை மாணவ, மாணவிகளுக்கான பாராட்டுவிழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது. கோல்ட் ஸ்டார் சிலம்பம் கிராண்ட் மாஸ்டர் சண்முகசுந்தரம் வரவேற்றுப் பேசினார். ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவர் சாரதா பொன்இசக்கி, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், இந்தியன் யூத் சிலம்பம் சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் வேல்முருகன், சிலம்பம் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சிதம்பரம், வெள்ளபாண்டி, சங்கரநாராயணன், ராமலட்சுமி, ஜெயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை வாழ்த்தி பேசினர். பயிற்சி பள்ளி மாஸ்டர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story