தடகள போட்டியில் தங்கம் வென்று அரியலூர் வாலிபர் சாதனை


தடகள போட்டியில் தங்கம் வென்று அரியலூர் வாலிபர் சாதனை
x

தடகள போட்டியில் தங்கம் வென்று அரியலூர் வாலிபர் சாதனை படைத்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி-லட்சுமி தம்பதியின் மகன் வல்லரசு (வயது 20). இவர் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 22-ந் தேதி காஷ்மீரில் நடைபெற்ற தடகள போட்டியில் 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தார். இதையடுத்து, சொந்த ஊர் திரும்பிய வல்லரசுவுக்கு ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க வரவேற்பு அளித்தனர்.


Next Story