பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஸ்கை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று ஸ்கை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
x

பல்வேறு போட்டிகளில் திருவண்ணாமலை ஸ்கை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

பல்வேறு போட்டிகளில் திருவண்ணாமலை ஸ்கை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலை அருகில் உள்ள ஸ்கை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தண்டராம்பட்டு வட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அப்போட்டிகளில் ஸ்கை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் கேரம் போட்டியில் 14, 17, 19, வயதிற்கு உட்பட்ட ஆண்கள், பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, வலையப்பந்து போட்டியில் 14, 17 வயதிற்கு உட்பட்ட பெண்கள் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைவர் சி.ரவிச்சந்திரன், துணைத் தலைவர் எஸ்.நீலாவதி சுப்பிரமணி, செயலாளர் வி.வரலட்சுமி வெங்கடேசன், இணை செயலாளர் ஆர்.விஷ்வநாதன், பொருளாளர் கே.சாந்திரமேஷ் மற்றும் பள்ளியின் முதல்வர் எஸ்.கே. மணிகண்டன், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் பி.சேகர், சிவஞானம், வினோத்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Next Story