கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை


கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கைப்பந்து போட்டியில் மாணவர்கள் சாதனை படைத்தனர்.

தென்காசி

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் தென் மண்டல அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. தென்காசி மாவட்ட கைப்பந்து கழகம் மற்றும் ப.மு.தேவர் கல்லூரியும் இணைந்து நடத்திய இப்போட்டியில் தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி நெல்லை, தென்காசி மாவட்டங்களை சேர்ந்த 16 அணிகள் பங்கு பெற்றன.

போட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணியினர் முதல் இடமும், சிவகாசி அய்ய நாடார்- ஜானகி அம்மாள் கல்லூரி இரண்டாம் இடமும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். ஹிந்து பள்ளி மூன்றாம் இடமும், கோவில்பட்டி நாடார் பள்ளி அணியினர் நான்காம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு கோப்பைகளும், சான்றிதழ்களும் தென்காசி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவில் கல்லூரியின் முதல்வர் ஹரி கெங்காராம், மாவட்ட ஹேண்ட்பால் கழக துணை தலைவர் விவேக் ராஜ், செயலர் ரமேஷ்குமார், நெல்லை மாவட்ட கைப்பந்து கழக தலைவர் சந்திரகுமார் மற்றும் அணி மேலாளர்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில் மாவட்ட ஹேண்ட்பால் கழக தலைவர் வேணு கோபால் மற்றும் சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்தனர். போட்டி ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் செய்திருந்தார்.


Next Story