துணிச்சலுடன் செயல்பட்டகுழந்தைகள் பாலகல்யாண் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்


தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

துணிச்சலுடன் செயல்பட்ட குழந்தைகள் பாலகல்யாண் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் துணிச்சலுடன் செயல்பட்ட குழந்தைகள் பாலகல்யாண் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

விருது

துணிச்சலுடன் செயல்பட்ட குழந்தைகள் பாலகல்யாண் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்ள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் துணிச்சலுடன் செயல்பட்ட குழந்தைகளுக்கு "பாலகல்யாண் புரஸ்கார் விருது" வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. துணிச்சலுடன் ஒரு செயல், சம்பவம் செய்து தங்களது உயிருக்கு ஆபத்தை எதிர்நோக்கும் தன்னலமற்ற சேவை புரிந்த குழந்தைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

தகுதிகள்

இந்த விருது பெற இந்திய குடிமகனாக மற்றும் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 18 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும், கடைசி 2 ஆண்டுகளுக்குள் சாதனை புரிந்திருக்க வேண்டும். இயற்கைக்கு எதிராக சிறந்த தைரியமான செயல் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட சூழ்நிலைகள் அல்லது மனவலிமையின் விதிவிலக்கான செயல், சுய மற்றும் சமூகத்துக்கு கடுமையான ஆபத்தை எதிர்கொள்வதில் புத்திசாலித்தனமாக செயல்பட்டவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. விளையாட்டு, மூகசேவை, அறிவியல் தொழில் நுட்பம், சுற்றுச்சூழல், கலை மற்றும் கலாச்சாரம், புதுமை ஆகியவற்றில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதை முன்பு பெற்றவராக இருத்தல் கூடாது.

விண்ணப்பிக்கலாம்

இந்த தகுதி உடையவர்கள்www.awards.gov.inஎன்னும் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை இணையதளம் வழியாக சமர்ப்பிக்க வருகிற 31-ந் தேதி கடைசிநாள் ஆகும். இணையதளத்தில் விண்ணப்பம் செய்த பின்பு மாவட் டசமூக நல அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், தூத்துக்குடி தொலைபேசி எண் 0461-2325606 என்ற முகவரியை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடைசிநாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story