வளவனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் செயல் அலுவலர் எச்சரிக்கை


வளவனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் செயல் அலுவலர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 5:00 PM IST)
t-max-icont-min-icon

வளவனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என செயல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம்

வளவனூர்

வளவனூர் பேரூராட்சியில் குடிநீர் கட்டணம் ரூ.1 கோடியே 30 லட்சம் பாக்கி உள்ளது. இதேபோல் சொத்து வரி கட்டண பாக்கி ரூ.12 லட்சம் உள்ளது. இந்த 2 கட்டணங்களையும் பாக்கி வைத்துள்ளவர்கள் அவற்றை உடனடியாக கட்ட வேண்டும். கட்ட தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படுவதோடு அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே குடிநீர் மற்றும் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்கள் உரிய கட்டணங்களை உடனடியாக செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் சட்ட நடவடிக்கையை தவிர்க்குமாறு பேரூராட்சி செயலாளர் தெரிவித்துள்ளார்.


Next Story