124 நிறுவனங்கள் மீது நடவடிக்கை


124 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
x

124 நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

ராணிப்பேட்டை

வேலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஞானவேல் தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களுடன் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் நேற்று ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது விடுமுறை தினமான நேற்று நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சட்டப்படி இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அளிக்கப்பட்டதா? என 182 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அதில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் 57 முரண்பாடுகளும், உணவு நிறுவனங்களில் 63 முரண்பாடுகளும் மற்றும் மோட்டார்போக்குவரத்து நிறுவனங்களில் 4 முரண்பாடுகளும் என மொத்தம் 124 முரண்பாடுகள் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களின் மீது இணக்க கட்டண அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story