அனைத்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு அலுவலர் மீதும் நடவடிக்கை


அனைத்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு அலுவலர் மீதும் நடவடிக்கை
x

லஞ்ச பண வசூலில் தொடர்புடைய அனைத்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


லஞ்ச பண வசூலில் தொடர்புடைய அனைத்து உணவுப்பொருள் கடத்தல் பிரிவு அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பிரிவு

தமிழக அரசு பொதுமக்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் வினியோகத்தில் முறைகேடுகளை தவிர்க்க உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு என்ற சிறப்பு பிரிவினை ஏற்படுத்தி உள்ளது. மாவட்டந்தோறும் இதற்கென ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் மாநில அளவில் ஐ.ஜி. தலைமையில், மண்டல அளவில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இப்பிரிவு செயல்பட்டு வருகிறது. பொதுவாக இப்பிரிவில் பணியமர்த்தப்பட போலீசார் அதிக ஆர்வம் காட்டுவார்கள் என கூறுவார்கள்.

கடத்தல் வழக்கு

விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் ரேஷன் அரிசி கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்ட சில நபர்கள் கைது செய்யப்படுவதில்லை என்றும் பரவலாக புகார் கூறப்படும் நிலையும் தொடர்கிறது.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தியதாகவும், அதில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் மறுதினமே மாவட்டத்தில் ஒரு பகுதியில் மட்டும் ரூ.4 லட்சத்து 35 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

இந்த செயல் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே லஞ்ச ஒழிப்பு போலீசார் இதன் ஆதி அந்தத்தை ஆராயாமல் பணத்தை கொண்டு வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துறை ரீதியாக விசாரணை நடத்த வேண்டும்.

அத்துடன் இந்த பண வசூலில் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story