அயோத்தி சாமியார் மீது நடவடிக்கை
அயோத்தி சாமியார் மீது நடவடிக்கை கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
திண்டுக்கல்
பழனி பகுதியை சேர்ந்த திராவிடர் விடுதலை கழகத்தினர் நேற்று, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளை திரித்து அவருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும், கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலும் அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா என்பவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். எனவே அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story