நகராட்சி கடைகளில் மாறுதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை
ராணிப்பேட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நகராட்சி அனுமதி பெறாமல் மாறுதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
ராணிப்பேட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நகராட்சி அனுமதி பெறாமல் மாறுதல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகரமன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.
நடவடிக்கை
ராணிப்பேட்டை நகர மன்ற கூட்டம் நேற்று ராணிப்பேட்டை நகர மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஏகராஜ், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது ராணிப்பேட்டை நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் நகராட்சி அனுமதி பெறாமல் மாறுதல்கள் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நகராட்சி பகுதிகளில் நாய்கள், பன்றிகள் மேய்வதை தடுக்க வேண்டும். நகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தனியார் கேபிள் வயர்கள் தெருவிளக்கு கம்பங்களில் கட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள்.
32 தீர்மானங்கள்
கூட்டத்தில், திடக்கழிவுகளை அகற்றி மீட்கப்ட்டுள்ள இடங்களில் மரக்கன்றுகள் நட்டு நகரப்புற காடுகள் உருவாக்குதல் என்பது உள்ளிட்ட 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள், வினோத் அப்துல்லா, கிருஷ்ணன், ஏர்டெல் குமார், ஜோதி சேதுராமன், நரேஷ்
உள்ளிட்ட பலர் பேசினார்கள்.