மாணவர்களை அலட்சியப்படுத்தும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை


மாணவர்களை அலட்சியப்படுத்தும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை
x

இலவச பஸ் பயண அட்டையுடன் பயணிக்கும் மாணவர்களை அலட்சியப்படுத்தும் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம்


நாகை கலெக்டர் அருண் தம்புராஜிடம், இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ஆறு.பார்த்திபன் மற்றும் கட்சியினர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நாகை மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று படிப்பதை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உதவும் வகையில், அரசு இலவச பஸ் பயண அட்டைகளை வழங்கி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் பள்ளிக்கு பஸ்சில் சென்று படித்து வருகின்றனர். ஆனால் அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் பஸ் நிறுத்தத்தில் மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும்போது, பஸ்சை நிறுத்தாமல் சென்று மாணவர்களை அலட்சியப்படுத்துகிறார்கள். மேலும் மாணவர்களை அவமரியாதையுடன் நடத்துகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story