தாய்-மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்


தாய்-மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்
x

தாய்-மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

ஈரோடு

கொடுமுடி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது உறவினர்களுடன் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

நான் என்னுடைய தாய் குப்பாள் (வயது 65) மற்றும் மனைவி, மகன், மகளுடன் வசித்து வருகிறேன். என்னையும், எனது தாயையும் எங்கள் பகுதியை சேர்ந்த தந்தை, மகன் தாக்கியதோடு கீழே தள்ளி விட்டு சாதி ரீதியாக பேசி பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுமுடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை. எனவே என்னையும், எனது தாயையும் கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்த தந்தை, மகனை கைது செய்து எங்களது உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story