ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை


ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வரிவசூலில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வருவாய் அலுவலரிடம் 6 உறுப்பினர்கள் மனு கொடுத்தனா்.

கடலூர்

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கம்மாபுரம் ஒன்றியம் பெரியாக்குறிச்சி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஊராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகியோர் தன்னிச்சையாக செயல்பட்டு வருகின்றனர். வீட்டுவரி, குடிநீர் வரியை வசூல் செய்து வங்கியில் செலுத்தாமல் முறைகேடு செய்து வருகின்றனர். இது பற்றி விருத்தாசலம் ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் நாங்கள் 6 உறுப்பினர்கள் கூட்டாக ராஜினாமா கடிதம் கொடுத்தோம். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் விசாரணை நடத்தினார். அவரிடம் ஊராட்சியில் நடைபெற்று வரும் குறைபாடுகளை, முறைகேடுகளை கூறினோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. ஆகவே வீட்டுவரி, குடிநீர் வரியை கையாடல் செய்த ஊராட்சிமன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனி அலுவலர் ஒருவரை நியமித்து ஊராட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.


Next Story