வாலிபர் விஷம் குடித்து தற்கொலை:சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார்


வாலிபர் விஷம் குடித்து தற்கொலை:சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார்
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாலிபர் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோாி போலீஸ் சூப்பிரண்டிடம் உறவினர்கள் புகார் மனு அளித்தனா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே அரசமங்கலத்தை சேர்ந்த பெருமாள் மனைவி வளர்மதி (வயது 50) என்பவர் நேற்று தனது குடும்பத்தினர், உறவினர்களுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

எனக்கு லோகேஸ்வரன், சந்துரு (32) என்ற 2 மகன்கள். எனது இளைய மகன் சந்துரு, சேர்ந்தனூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தார். அவருக்கு தர வேண்டிய ரூ.95 ஆயிரத்துக்கு வட்டிபோட்டு ரூ.1 லட்சத்து 75 ஆயிரத்தை தருமாறு கேட்டு எனது மகனிடம் தகராறு செய்தனர். அதற்கு சந்துரு ரூ.32 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை விரைவில் தருவதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர், பணத்தை முழுவதுமாக தரும்படி கேட்டு கடந்த 11-ந் தேதியன்று எனது மகனை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதோடு வேட்டியை அவிழ்த்துவிட்டு அவமானப்படுத்தியுள்ளனர். இதனால் அவமானம் தாங்க முடியாமல் எனது மகன் சந்துரு, அன்று மதியம் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார். உடனே அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். எனவே எனது மகன் சந்துரு இறப்பிற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story