சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரம் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர் புகார்


சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரம் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மருத்துவ அலுவலர் புகார்
x

சமூக வலைத்தளங்களில் பொய் பிரசாரம் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசில் மருத்துவ அலுவலர் புகார் அளித்துள்ளார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் குமரவேல், சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார் அதில் கூறியிருப்பதாவது;

மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையை பற்றி சிலர் வேண்டுமென்றே சமூக வலைதளங்களில் இங்கு ரத்தம் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அரசு மருத்துவமனையில் ரத்தம் பெற்ற விவரம் முழுவதும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட குழு சரிபார்க்கப்பட்டு உள்ளது.

இங்கு பொதுமக்கள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படும் ரத்தம் சேமிக்கப்பட்டு அறுவை சிகிச்சைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது அவசர தேவைக்கு வெளி மருத்துவமனையில் தேவைப்படுவோருக்கு பணம் செலுத்தி ரசீது வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் வேண்டுமென்றே பொய் பிரசாரம் செய்த அரசு மருத்துவமனைக்கு களங்கம் விளைவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெகடர் பிரேமா, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


Next Story