உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை-தென்காசி கலெக்டர் எச்சரிக்கை


உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை-தென்காசி கலெக்டர் எச்சரிக்கை
x

உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்காசி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்காசி

தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணி புரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள், தமிழக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட கலெக்டர் மூலம் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். உரிமம் இல்லாமல் பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை.

மேலும் விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வில் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story