விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் பொறி குறித்து மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
உத்தமபாளையம் அருகே நாகையகவுண்டன்பட்டியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, உத்தமபாளையம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜாஸ்மின் தலைமை தாங்கினார். தோட்டக்கலைத்துறை அலுவலர் பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவிகள் கலந்துகொண்டனர். இதில், விவசாயிகளுக்கு சூரிய சக்தியில் இயங்கும் பூச்சி பொறி குறித்தும், அதன் நன்மைகள் மற்றும் இயங்கும் முறை பற்றியும் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல், போடி அருகே சில்லமரத்துப்பட்டியில் சூரியசக்தியில் இயங்கும் பூச்சி பொறி குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்க நிகழ்ச்சி நடந்தது. இதில், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் பயிற்சிபெறும், குள்ளப்புரம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அபிநயா, ஏஞ்சலின் உள்பட 12 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.