மீன் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை


மீன் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் மீன் இறைச்சி கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் நடவடிக்கை எடுக்கப்ப்டும் என நகர் மன்ற தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில் இருந்து மீன் கழிவுகள் பொதுவெளிகளில் கொட்டப்படுவதாக நகராட்சிக்கு தொடர்ந்தது புகார் வந்ததது. இதனை அடுத்து இறைச்சி, மீன் விற்பனையாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வாசுதேவன் தாங்கினார். சுகாதார அலுவலர் ராம் செந்தில்குமார், மேலாளர் காதுர்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜ கணேஷ் வரவேற்றார். இக்கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் கலந்துகொண்டு பேசுகையில், இனிவரும் காலங்களில் கோழி, ஆடு, மீன் உள்ளிட்ட இறைச்சி கழிவுகளை பொது இடங்களிலோ அல்லது குப்பை தொட்டிகளிலோ கொட்ட கூடாது மேலும் நகராட்சியின் சார்பாக தனியார் ஒப்பந்த நிறுவனம் இறைச்சிக் கழிவுகளை சேகரித்து அனல்மின் நிலையங்களுக்கு அனுப்ப உள்ளனர். எனவே தனியார் ஒப்பந்த பணியாளர்கள் வரும்பொழுது அவர்களிடம் இறைச்சி கழிவுகளை பாதுகாப்பான முறையில் ஒப்படைக்க வேண்டும் என்றார். இதையும் மீறி பொது இடங்களில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் அவர்களுக்ஞகு அபராதம் விதைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் மீன், ஆடு, கோழி, இறைச்சி கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட ஏராளமான கலந்து கொண்டனர்.


Next Story