விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை


விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
x

விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விருதுநகர்


விருதுநகர் நகரசபை கூட்ட அரங்கில் கலெக்டர் ஜெயசீலனுடன், நகரசபை தலைவர் மாதவன், துணைத்தலைவர் தனலட்சுமி மற்றும் கவுன்சிலர்கள் கலந்தாய்வு மேற்கொண்டனர்.

கமிஷனர் ஸ்டான்லி பாபு, என்ஜினீயர் மணி உள்ளிட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர். கலந்தாய்வின் போது விருதுநகருக்கான தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் கடந்த டிசம்பர் மாதமே பயன்பாட்டிற்கு வர வேண்டிய நிலையில் இன்னும் பணி முடிவுபெறாத நிலை உள்ளதாகவும், இதனால் நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாத நிலை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது விருதுநகர் புல்லலக்கோட்டை ரோட்டில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதால் அந்த பாதையில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. விருதுநகர் புதிய பஸ் நிலையம் இன்னும் பயன்பாட்டிற்கு வராத நிலையில் உள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாள சாக்கடை திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றிற்க்கு நிதி ஒதுக்கீடு கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. வணிக வளாகம் மற்றும் திருமண மண்டபம் கட்டி அதன் மூலம் நகராட்சியின் வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நகரின் வளர்ச்சிக்கு தேவைப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.


Next Story