விழுப்புரம் மாவட்டத்தில்ரோந்து வாகனங்களை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தினால் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரிக்கை


விழுப்புரம் மாவட்டத்தில்ரோந்து வாகனங்களை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தினால் நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரிக்கை
x
தினத்தந்தி 1 Aug 2023 12:15 AM IST (Updated: 1 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் ரோந்து வாகனங்களை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 30 சட்டம்- ஒழுங்கு போலீஸ் நிலையங்களிலும் ரோந்துப்பணியை மேற்கொள்ளும் போலீசாருக்கு புதுப்பிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

இதையொட்டி நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கலந்துகொண்டு, போலீஸ் நிலையங்களில் ரோந்துப்பணி மேற்கொள்ளும் போலீசாருக்கு 49 இருசக்கர வாகனங்களையும், 16 இருசக்கர வாகனங்களை பெண் போலீசாருக்கும் என 65 இருசக்கர வாகனங்களை வழங்கினார். அந்த வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய், கொடியசைத்து பயன்பாட்டுக்காக தொடங்கி வைத்தார்.

முன்னதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் கூறுகையில், விழுப்புரம் மாவட்டத்தில் அந்தந்த போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் ரோந்துப்பணி மேற்கொள்ள 49 இருசக்கர வாகனங்களும், பள்ளி- கல்லூரி நேரங்கள் மற்றும் பெண்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்துப்பணி மேற்கொள்ள 16 இருசக்கர வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை எக்காரணத்தை கொண்டும் தங்களது சொந்த காரணங்களுக்காக பயன்படுத்தக்கூடாது. அதை மீறினாலோ அல்லது ரோந்துப்பணி செல்லாமல் ஏமாற்றினாலோ சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

இந்நிகழ்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜோசப், இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், சப்-இன்ஸ்பெக்டர் கல்யாணராமன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேதுராமன், ரங்கராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story