விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை


விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

நாகையில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகையில் விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஷேர் ஆட்டோக்கள்

நாகை மாவட்டம் நாகூரில் உள்ள ஆண்டவர் தர்காவின் 466 -வது ஆண்டு கந்தூரி விழா வருகிற 5-ந் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து நாகையில் ஷேர் ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தும் பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிசாமி தலைமை தாங்கினார்.இதில் ஷேர்ஆட்டோக்களை நடப்பில் உள்ள ஆவணங்களுடன் இயக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிக கட்டணம் வாங்கக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நபர்களைவிட அதிக நபர்களை ஏற்றிச்செல்லுதல் கூடாது. செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குதல் கூடாது. அனைத்து டிரைவர்களும் சீருடை அணிந்து வாகனம் இயக்க வேண்டும்.

நடவடிக்கை

அதிவேகமாக வாகனம் இயக்குதல் கூடாது போன்ற அறிவுரைகளை மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு வழங்கினார். விதிகளை மீறி ஷேர் ஆட்டோக்களை இயக்கினால் தணிக்கை அறிக்கை வழங்கி வாகனங்கள் சிறைபிடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதில் நாகை மற்றும் நாகூர் பகுதியை சேர்ந்த டிரைவர்கள், உரிமையாளர்கள் 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story