கணவர், குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


கணவர், குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 23 May 2023 12:30 AM IST (Updated: 23 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகள் ஷோபனா. இவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில், எனக்கும் குவைத் நாட்டில் வேலை பார்க்கும் திருச்சியை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 49 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசை பொருட்கள் வரதட்சணையாக எனது பெற்றோர் கொடுத்தனர்.

ஆனால் திருமணம் ஆன சில மாதங்களிலேயே கணவரும், அவருடைய குடும்பத்தினரும் கூடுதலாக 50 பவுன் நகை, ரூ.10 லட்சம் பணம் வரதட்சணையாக வேண்டும் என கேட்டு என்னை கொடுமைப்படுத்தினர். இந்த நிலையில் எனக்கு தெரியாமல் எனது கணவர் குவைத்துக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன் பின்னர் கணவரின் குடும்பத்தினர் என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர். இதனால் பயந்துபோன நான், பெற்றோர் வீட்டுக்கு திரும்பி வந்துவிட்டேன். எனவே வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.


Next Story