குன்னூர் நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பொதுமக்கள் வலியுறுத்தல்


குன்னூர் நகராட்சியில் விதிமீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 March 2023 12:15 AM IST (Updated: 13 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் நகராட்சியில் விதிமீறிய கட்டிடங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

நீலகிரி

குன்னூர்

குன்னூர் நகராட்சியில் விதிமீறிய கட்டிடங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கட்டுப்பாடுகள் விதிப்பு

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழை காலத்தில் நிலச்சரிவு, மரம் விழுதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இது மட்டுமின்றி உயரமான கட்டிடங்களும் இடிந்து விழுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, அனுமதி வாங்கி கட்டப்படும் கட்டிடங்கள் 17 மீட்டருக்கு மேல் கட்டக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு அமலில் உள்ளது. இருந்த போதிலும் கடந்த ஒரு வருட காலமாக விதிமீறிய கட்டிடங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் ஓடை, ஆறுகள் மற்றும் கால்வாய் போன்ற வருவாய் துறைக்கு சொந்தமான இடங்களிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இந்த நிலையில், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 3-வது வார்டு எம்.ஜி.ஆர் நகர், 20-வது வார்டு மாடல்ஹவுஸ், 25- வது வார்டு ராஜாஜி நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அரசு இடங்களை ஆக்கிரமித்தும், விதிகள் மீறியும் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும் சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதியில் ஆய்வு மேற்கொள்ளாமல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் புகார்கள் எழுந்துள்ளது. அதனால் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் விதிகள் மீறி கட்டப்படும் கட்டிடங்கள் கட்டப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுப்பதோடு, விதி மீறி கட்டிடங்களை கட்டுபவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அன்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story