நீர் ஆதாரங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
நீர் ஆதாரங்களை சேதப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காழியப்பநல்லூர், அனந்தமங்கலம் , தில்லையாடி உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆறாகவும், மழை வெள்ளக் காலங்களில் வடிகால் ஆறாகவும் பொறையாறு அருகே அனந்தமங்கலம் கண்ணப்பமூலை மகிமலையாறு உள்ளது. இந்த ஆறு சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம், வேதாரண்யம் நான்கு வழிச்சாலைகளை இணைக்கும் பகுதியில் உள்ளது. இந்த ஆற்றில் அடையாளம் தெரியாத நபர்களால் கான்கிரீட் கலவைகள் கொட்டப்பட்டு ஆற்றின் உட்பகுதியில் சிமெண்டு கான்கிரீட் கலவைகள் பரவி கிடைக்கின்றன. ஆற்றில் கான்கிரீட் கலவைகளை கொட்டிய நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இது போன்ற ஆறு ,குளம், வாய்க்கால், கிணறு ,உள்ளிட்ட நீர் ஆதாரங்களை சேதப்படுத்துபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தினர்.மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.