கோழி இறைச்சி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்


கோழி இறைச்சி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

திமிரி நம்பரை சாலையில் கோழி இறைச்சி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி நம்பரை சாலையில் இருபுறமும் கோழி இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுகிறது. இச்சாலையின் வழியாக 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தொழிலாளிகள் திமிரி, ஆற்காடு பகுதிக்கு செல்கின்றனர். இந்த வழியாக செல்லும்போது துர்நாற்றம் வீசுவதால் அனைவரும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்கின்றனர்.

மேலும் இங்குள்ள இறைச்சி கழிவுகளால் நாய்கள் அதிக அளவு உள்ளன. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரும் அச்சத்துடன் செல்கின்றனர். சமீபத்தில் ஒரு மூதாட்டியை நாய் கடித்துள்ளது.

எனவே, சாலையில் உள்ள கழிவு பொருட்களையும் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் இங்கு கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுவார்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story