முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x

முககவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையின் போது ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் மக்கள் முககவசம் அணிவதில்லை. முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பஸ்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பெரும்பாலானவர்கள் முககவசம் அணிவதில்லை. இதனால் மக்களிடையே கொரோனா மீண்டும் அதிகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story