உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-தி.மு.க.வினர் மனு


உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-தி.மு.க.வினர் மனு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

திருநெல்வேலி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த உத்தரபிரதேச சாமியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாவட்டம் முழுவதும் போலீஸ் நிலையங்களில் தி.மு.க.வினர் மனு அளித்தனர்.

நெல்லை

நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மைதீன்கான், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, லட்சுமணன் உள்ளிட்டவர்கள், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, துணை போலீஸ் கமிஷனர் அனிதாவிடம் புகார் மனு வழங்கினர்.

அதில், ''உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த பரமஹம்ச ஆச்சார்யா மகராஜ் என்ற சாமியார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வெட்டிக்கொண்டு வருவோருக்கு ரூ.10 கோடி அளிக்கப்படும். யாரும் தலையை துண்டிக்காவிட்டால் நானே அவரது தலையை துண்டிப்பேன். அதற்கு வாள் தயாராக வைத்துள்ளேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி மாநில துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுபாண்டியன் மற்றும் நிர்வாகிகள், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் துணை கமிஷனர் அனிதாவிடம் புகார் மனு அளித்தனர்.

களக்காடு-விக்கிரமசிங்கபுரம்

மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி, களக்காடு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாளிடம் களக்காடு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வாகருணாநிதி, நகர செயலாளர் மணிசூரியன், மாவட்ட பொருளாளர் ஜார்ஜ்கோசல், நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், யூனியன் துணைத்தலைவர் விசுவாசம், நகர துணை செயலாளர் சுபாஷ் உள்ளிட்டவர்கள் மனு வழங்கினர்.

இதேபோன்று அம்பை யூனியன் சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமையில், விக்கிரமசிங்கபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. அம்பை ஒன்றிய தி.மு.க. துணை செயலாளர் செல்வம், மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் நெடுஞ்செழியன், அய்யப்பன், டேவிட், முத்துகுமார், பேச்சிதேவர், யோபுதாஸ், அருளப்பன், ஜெகதீஷ், கோபிநாத், குட்டிதங்கராஜா, போர்வெல் மணி, இஸரவேல், செல்வம், சுரேஷ், பிரபு, முத்துபாண்டி மற்றும் பலர் உடன் இருந்தனர். இதேபோல விக்கிரமசிங்கபுரம் நகர தி.மு.க. செயலாளர் கணேசன் தலைமையிலும் புகார் மனு அளிக்கப்பட்டது.

நாங்குநேரி-அம்பை

மேலும் நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமையில், நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, மறுகால்குறிச்சி ஊராட்சி துணைத்தலைவர் புஷ்பபாண்டி உள்ளிட்டவர்கள் மனு அளித்தனர்.

இதேபோன்று அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ்குமாரிடம் அம்பை ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் தலைவருமான பரணி சேகர், ஒன்றிய அவைத்தலைவர் முத்துப்பாண்டியன், பொருளாளர் பூதத்தான், பஞ்சாயத்து தலைவர்கள் ராம் சங்கர், ஜெகன், முருகன், சுப்புலட்சுமி நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் புகார் மனு அளித்தனர்.

அம்பை நகர தி.மு.க. சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினரும், நகரசபை தலைவருமான கே.கே.சி.பிரபாகர பாண்டியன் தலைமையில், அரசு வக்கீல் காந்திமதிநாதன், மாவட்ட பிரதிநிதிகள் அண்ணாதுரை, ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களும் மனு அளித்தனர். மேலும் அம்பை ஒருங்கிணைந்த கோர்ட்டு தி.மு.க. வக்கீல் அணி சார்பில், மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டவர்களும் மனு வழங்கினர்.


Next Story