தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் விற்ற 4 கடைகள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் விற்ற 4 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கடைகளில் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தினர். அதன்படி 120 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இதில் கயத்தாறில் உள்ள ஒரு கடையில் 5-வது முறையாக தடை செய்யப்பட்ட உணவுப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், அந்த கடையின் உணவு பாதுகாப்பு உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் 3 மாதம் வரை உணவு பாதுகாப்பு உரிமம் பெற முடியாது. இதுதவிர கோவில்பட்டியில் 2 கடைகள் உடன்குடியில் ஒரு கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்யவும், அதில் 2 கடைகளை மூடி சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.