ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வர நடவடிக்கை
விருதுநகர் நகர் பகுதிக்கு ஒண்டிப்புலிக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் நகர் பகுதிக்கு ஒண்டிப்புலிக்கு கல்குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கல் குவாரி
விருதுநகர் நகராட்சி பகுதிக்கு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பு நகர் பகுதியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அப்போதைய நகராட்சி நிர்வாகம் கடந்த 1988-ம் ஆண்டு விருதுநகர் அருகே உள்ள ஒண்டிப்புலி கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்டு ஆலைக்கு சொந்தமான கல்குவாரியில் இருந்து தண்ணீர் எடுத்து வர அந்த நிறுவனத்தின் ஒப்புதல் பெற்று அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்த கல்குவாரியிலிருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்க வாய்ப்புள்ளது.
பாதிப்பு
இந்நிலையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது ஒண்டிப்புலியில் இருந்துவரும் குடிநீர்பகிர்மான குழாய்கள் சேதம் அடைந்ததால் குடிநீர் கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்பட்டு முற்றிலுமாக விருதுநகருக்கு ஒண்டிப்புலி குடிநீர் கொண்டு வருவது நின்று போய் விட்டது.
இதனைத் தொடர்ந்து ஒண்டிப்புலியிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பகிர்மான குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அந்த குழாய்களில் பல பகுதிகளில் மீண்டும் உடைப்பு ஏற்படும் நிலை இருந்ததால் குடிநீர் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் ஒண்டிப்புலி தண்ணீரை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படவில்லை.
கோரிக்கை
தற்போது விருதுநகரில் குடிநீர் பற்றாக்குறை நீடிக்கும் நிலையில் விருதுநகர் நகராட்சி நிர்வாகம் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.