ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை


ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை
x

குடிநீர் ஆதாரத்தை பெருக்க ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்


குடிநீர் ஆதாரத்தை பெருக்க ஒண்டிப்புலி குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர விருதுநகர் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் வினியோகம்

விருதுநகர் நகராட்சி பகுதியில் தற்போது 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் குடிநீர் வினியோக இடைவெளி நாட்களை குறைக்க வேண்டும் என நகர் மக்கள் பரவலாக வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கு நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போதைய நிலையில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர ்திட்டத்தில் இருந்தும், ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்தும் பிரதானமாக குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆனாலும் ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் குழாயில் உடைப்பு ஏற்படுவதால் கிடைக்கும் குடிநீர் அளவு குறைந்து விடுகிறது.

குழாய் உடைப்பு

தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு, மின்தடை போன்ற காரணங்களால் குடிநீர் தினசரி 25 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைத்து வருகிறது. அதிலும் ஆனைக்குட்டம் அணைப்பகுதியிலிருந்து வரும் குடிநீர் உப்பு தண்ணீராக உள்ளதென நகர் மக்கள் புகார் கூறும் நிலையும் உள்ளது.

இந்தநிலையில் கூடுதல் தாமிரபரணி திட்டம் நிறைவேற்றப்பட்டால் நகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்க்கப்படுகிறது. ஆனாலும் அதுவரை நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டிய நிலையில் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து தினசரி 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில் நகராட்சி நிர்வாகம் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தாமல் உள்ளது.

வலியுறுத்தல்

நான்கு வழி சாலை அமைப்பு பணியின் போது இந்த கல்குவாரியில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதில் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இதுவரை நகராட்சி நிர்வாகம் அங்கிருந்து தண்ணீர் கொண்டு வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாத நிலை உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் தற்போது நீர் ஆதாரத்தை பெருக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில் ஒண்டிப்புலி கல்குவாரியில் இருந்து குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story