கடைமடை வரை தண்ணீர் வர நடவடிக்கை


கடைமடை வரை தண்ணீர் வர நடவடிக்கை
x
தினத்தந்தி 25 July 2023 12:15 AM IST (Updated: 25 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடைமடை வரை தண்ணீர் வர நடவடிக்கை ;விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தஞ்சை மாவட்ட 24-வது மாநாடு பட்டுக்கோட்டையில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார். மாநாட்டு கொடியை கிருஷ்ணன் ஏற்றி வைத்தார். நினைவு சின்னத்திற்கு வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். மாநாட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி தொடங்கி வைத்து பேசினார். விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் வீரமோகன், மாவட்ட துணை செயலாளர் சக்திவேல், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலியபெருமாள், பாஸ்கர், திருநாவுக்கரசு, ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பூபேஷ் குப்தா, நகர செயலாளர் விஜயன், மாவட்ட துணைத் தலைவர்கள் தனசீலி, பாரதி மோகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். டெல்டா மாவட்டத்திற்கு தூர்வார தமிழக அரசு ரூ.9 கோடி ஒதுக்கியும், முறையாக தூர் வாராமல் தண்ணீர் வரவில்லை. எனவே கடைமடை வரை தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயலாளர் சி.பக்கிரி சாமி நன்றி கூறினார்.


Next Story