நெக்னாமலை, புதூர்நாடு மலை சாலை அமைக்க நடவடிக்கை


நெக்னாமலை, புதூர்நாடு மலை சாலை அமைக்க நடவடிக்கை
x

வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நெக்னாமலை, புதூர்நாடு மலைச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணைய உறுப்பினர் பேசினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் நெக்னாமலை, புதூர்நாடு மலைச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஆணைய உறுப்பினர் பேசினார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பத்தூர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் மாநில மனித உரிமைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தலைமையில் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா, போலீஸ் சூப்பிரண்டு கி.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் பேசியதாவது:-

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் 46 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மக்கள் மத்தியில் தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தின் மீது நல்ல நம்பிக்கை உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வழக்குகள் மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நெக்னாமலை சாலை, புதூர்நாடுமலை ஆகிய மலை கிராமங்களில் சாலை அமைக்க பணிகள் வனத்துறையிடமிருந்து அனுமதி வரப்பெற்றவுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பு மனுநீதி நாள் முகாம் மூலம் குறைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்கின்ற பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொள்ள வேண்டும். மக்கள் தொடர்பு முகாம்கள் மூலம் நடைபெறும் பகுதிகளில் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வுக்கானப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிகிச்சை முறை

அதைத்தொடர்ந்து திருப்பத்தூர் 'உதவும் உள்ளங்கள்' தொண்டு நிறுவனத்தின் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வில்சன் ராஜசேகர், ஹரிஹரன், இணை இயக்குனர் (ஊரக நலப்பணிகள்) மரு.மாரிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன தலைவர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story