பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை அழிக்க நடவடிக்கை


பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை அழிக்க நடவடிக்கை
x

15 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை அழிப்பதற்கு வேலூரில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட

வேலூர்

வாக்குப்பதிவு எந்திரங்கள்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வேலூர் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் 2006, 2007-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை.

15 ஆண்டுகள் நிறைவு பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த பழைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

அதன்படி நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்பு குடோன் திறக்கப்பட்டு, எந்திரங்களை அழிப்பதற்காக பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கண்காணிப்பு அலுவலர் எழிலரசி தலைமையில் ஊழியர்கள் ஒவ்வொரு எந்திரத்தையும் ஸ்கேன் செய்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்த 1,167 வாக்குப்பதிவு எந்திரங்களும், 635 கட்டுப்பாட்டு கருவிகளும் பழைய 'எம்-2' எனப்படும் பழைய வகை எந்திரங்கள். இதை அழிக்கும் பொருட்டு பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள எந்திரங்கள் அடுத்த மாதம் அனுப்பி வைக்கப்படும் என்றனர்.


Next Story