நெல் கொள்முதலில் ஊழலை ஒழிக்க நடவடிக்கை


நெல் கொள்முதலில் ஊழலை ஒழிக்க நடவடிக்கை
x

நெல் கொள்முதலில் ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது

தஞ்சாவூர்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர் சங்கத்தின் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில நிர்வாகக்குழு கூட்டம் தஞ்சையில் நேற்று நடந்தது. மாநில தலைவர் சாமிக்கண்ணு, மாநில துணைத் தலைவர் சிவானந்தம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் கோவிந்தராஜன் மற்றும் மாநில, மாவட்ட செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், நெல் கொள்முதலில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதையும், விவசாயிகளிடம் குறிப்பிட்ட தொகை பெறுவதையும் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் ஊழல் முறைகேடுகளை தடுக்க மேல்மட்ட உயர் அதிகாரிகளிடம் இருந்து நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். தீபாவளி பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்பே பணியாளர்களுக்கும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும். கடந்த 2012-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த கொள்முதல் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். கொள்முதல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21 ஆயிரம் மாத சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






Next Story