குடிநீரின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை


குடிநீரின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை
x

மாவட்டத்தில் தனியார் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்டநிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர்

மாவட்டத்தில் தனியார் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்டநிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் பற்றாக்குறை

மாவட்ட முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளால் குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில் குடிநீர் பற்றாக்குறை காரணமாக பொதுமக்கள் தனியார் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் தனியார் வாகனங்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை அதிகரித்து வருகிறது. இவ்வாறு குடிநீர் வினியோகம் செய்வோர் நிலத்தடி நீர் ஆதாரங்களையே நம்பி இத்தொழிலை செய்து வருகின்றனர்.

தேவை

ஆனால் இந்த வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்ய எந்த முறையான நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது. எனவே தனி நபர் முதல் நிறுவனங்கள் வரை குடிநீர் வினியோகம் செய்வதை பிரதான தொழிலாக மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும் வேறு வழியின்றி தங்கள் பகுதியில் வரும் வாகனங்களின் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. எனவே இவ்வாறு வினியோகிக்கப்படும். குடிநீரின் தரத்தை ஆய்வு செய்வது அத்தியாவசிய தேவையாக உள்ளது.

கோரிக்கை

எனவே மாவட்ட நிர்வாகம் உணவு பாதுகாப்பு துறை மூலம் இவ்வாறு தனியார் வாகனங்கள் மூலம் வினியோகிக்கப்படும் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து தரத்தை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. வினியோகிக்க தகுதி இல்லாத குடிநீர் வினியோகிக்கப்பட்டால் அந்த குடிநீரை வினியோகம் செய்பவர் மீது உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டியது அவசியம் ஆகும்.


Next Story