உழவர் சந்தையில் கடைகளை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை


உழவர் சந்தையில் கடைகளை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை
x

உழவர் சந்தையில் கடைகளை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 மாவட்ட அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் வேளாண் விற்பனை இயக்குனர் தெரிவித்தார்

திருநெல்வேலி

உழவர் சந்தையில் கடைகளை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 4 மாவட்ட அலுவலர்கள் ஆய்வு கூட்டத்தில் வேளாண் விற்பனை இயக்குனர் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை இயக்குனர் நடராஜன் தலைமை தாங்கி, தென் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் வருடாந்திர வருமானத்தை அதிகப்படுத்துவற்கான தொழில் பயிற்சிகளை வழங்க, கண்டுணர்வு சுற்றுலா மூலம் விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

உழவர் சந்தைகள்

4 மாவட்ட உழவர் சந்தைகளில் உள்ள அனைத்து கடைகளையும் செயல்படுத்தவும், விவசாயிகள் வரத்து எண்ணிக்கை அதிகரித்து விவசாயிகளின் விளை பொருட்களுக்கு அதிக லாபம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாய விளைபொருட்களின் உள்வரத்து, வெளிவரத்து அதிகரிக்கவும், பொருளீட்டு கடன் வசதிகள் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைக்கவும் வேண்டும். அனைத்து ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள குளிர்பதன கிடங்குகளை முழுமையாக செயல்படுத்த‌ வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் சென்னை வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை இணை இயக்குனர் (ஒழுங்குமுறை விற்பனைகூடம்) உமாதேவி மற்றும் வேளாண்மை இணை இயக்குனர் (வேளாண் வணிகம்) முரளிதரன், நெல்லை வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) பூவண்ணன் மற்றும் நெல்லை விற்பனைக்குழு செயலாளர் எழில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story