குன்னூர் மவுண்ட்பிளசெண்ட் பகுதியில் 4 கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை
குன்னூர் மவுண்ட்பிளசெண்ட் பகுதியில் 4 கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை
குன்னூர்
குன்னூர் நகரப் பகுதியில் குற்ற செயல்கள் நடைபெறுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக குன்னூர் மவுண்ட் பிளசண்ட் பகுதியில், சி.சி.டி.வி., கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து குடியிருப்போர் நலசங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு 4 கேமராக்கள் போலீசாரிடம் வழங்கி, அதனை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குன்னூர், நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்., 2-வது வார்டு கவுன்சிலர் ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத் தலைவர் கணேசன் வரவேற்று பேசினார். மேலும் புதிதாக அமைக்கப்படும் கேமராக்களை காவல்துறையை சேர்ந்த நசிம்பாஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் நல சங்க செயலாளர் குணசேகரன், பொருளாளர் ரவிச்சந்திரன் உள்பட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.