25 கிராமங்களை மானாமதுரை தாலுகாவுடன் இணைக்க 8 வாரத்தில் நடவடிக்கை -வருவாய்த்துறை கமிஷனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


25 கிராமங்களை மானாமதுரை தாலுகாவுடன் இணைக்க 8 வாரத்தில் நடவடிக்கை -வருவாய்த்துறை கமிஷனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

25 கிராமங்களை மானாமதுரை தாலுகாவுடன் இணைக்க 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை கமிஷனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


25 கிராமங்களை மானாமதுரை தாலுகாவுடன் இணைக்க 8 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை கமிஷனருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

25 கிராமங்கள்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா பில்பத்தி முத்துராமலிங்கபுரத்தை சேர்ந்த கிருஷ்ணதேவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்களுடைய பகுதியான புளியங்குளம் குரூப், பெருங்கரை குரூப், கீழப்பிடாவூர் குரூப் ஆகிய 3 வருவாய் கிராமங்கள் காளையார் கோவில் தாலுகாவுடன் இணைக்கப்பட்டு உள்ளன. இந்த 3 வருவாய் கிராமங்களுக்கு உட்பட்டு 25 கிராமங்களை சேர்ந்தவர்கள் வருவாய் தொடர்பான நடவடிக்கைகளுக்கு இங்கிருந்து காளையார்கோவில் சென்று வர 3 பஸ்கள் மாறிமாறி செல்ல வேண்டும். இதனால் வீண் செலவு, அலைக்கழிப்பு என கிராம மக்கள் அவதிப்படு கின்றனர். இதை தவிர்க்க 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மானாமதுரை தாலுகா அலுவலகத்துடன் 25 கிராமங்களையும் இணைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு அளித்தும் பலன் இல்லை. எனவே எங்களது மனுவின் அடிப்படையில் மேற்கண்ட 25 கிராமங்களையும் மானாமதுரை தாசில்தார் அலுவலகத்துடன் இணைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

8 வாரத்தில் நடவடிக்கை

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் கோரிக்கை குறித்து வருவாய்த்துறை முதன்மை செயலாளருக்கு மாவட்ட கலெக்டர் பரிந்துரை அனுப்பி உள்ளார். அந்த பரிந்துரை நிலுவையில் உள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், 25 கிராமங்களையும் மானாமதுரை தாசில்தார் அலுவலகத்துடன் இணைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் 8 வாரத்தில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story