சுங்கச்சாவடிகளில் அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை
சுங்கச்சாவடிகளில அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சுங்கச்சாவடிகளில அதிவேகமாக வரும் வாகனங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கண்காணிப்பு
சாலைபாதுகாப்பு வாரவிழா கடந்த 11-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. நிறைவு நாளில், மதுரை சரக இணைப்போக்குவரத்து ஆணையர் பொன்.செந்தில் நாதன் மற்றும் வட்டாரபோக்குவரத்து அலுவலர் சித்ரா உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர்களால் அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கு சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.
மேலும், மதுரை-திருச்சி சிட்டம்பட்டி சுங்கச்சாவடி மற்றும் அருப்புக்கோட்டை- தூத்துக்குடி மார்க்கமாக செல்லக்கூடிய எலியார்பத்தி சுங்கச்சாவடி மற்றும் திருமங்கலம் சுங்கச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைவிட அதிவேகமாக வரக்கூடிய வாகனங்களை கண்காணிக்கப்பட்டு வாகனங்களை தணிக்கை செய்து அவற்றிக்கு மோட்டார் வாகன ஆய்வாளர்களால் சாலைபாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் விதி மீறல் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
அறிவுறுத்தல்
பொதுமக்கள் சாலையை கடக்கும் பொழுது காவலர்களின் உத்தரவு சின்னங்களை மதித்து பாதசாரிகள் செல்லும் இடத்தின் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டு 32 சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பெரியார் பஸ் நிலையம்
மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து போலீசாரின் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று மாலை நடந்தது. அப்போது வாகன ஓட்டிகளிடம் டவுன் போக்குவரத்து உதவி கமிஷனர் செல்வின் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். அந்த நேரத்தில் தலைகவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை நிறுத்தி அவர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பல்வேறு விழிப்புணர்வு வழங்கினார். மேலும் அவர்கள் இனி தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டுவேன், அதிவேகமாக வாகனம் ஓட்ட மாட்டேன். ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட மாட்டேன், இருசக்கர வாகனத்தில் 3 நபர்களுடன் பயணிக்க மாட்டேன், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்ட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், கணேஷ்ராம், தங்கபாண்டியன், தங்கமணி மற்றும் போலீசார் பங்கேற்றனர். மேலும் பஸ்நிலையத்திற்குள் சென்று பயணிகள் மற்றும் டிரைவர்களிடமும் போக்குவரத்து விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.