பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை
பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர்
விருதுநகரில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் முதல் மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் குமரவேல் தலைைம தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுந்தர்ராஜன், ரவீந்திரன் பிச்சை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை தொடங்கி வைத்து அகில இந்திய தலைவர் கங்காதரன் பேசினார். மாவட்ட நிதி காப்பாளர் புவனேசன் அறிக்கை சமர்ப்பித்தார். பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். மாநில செயலாளர் செல்லச்சாமி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மாவட்டத்தில் தீப்பெட்டி, பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story