மண் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை


மண் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை
x

கடுவங்குடி ஊராட்சியில் மண் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் இணை செயலாளரும், கடுவங்குடி ஊராட்சி மன்ற தலைவருமான மகேந்திரன் மற்றும் கிராம மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் முருகண்ணனிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம் கடுவங்குடி ஊராட்சி விராலூரில் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் வடக்கு தெரு சாலை மண் சாலையாக உள்ளது. இதுவரை தார் சாலையாக மாற்றப்படாத இந்த சாலையில் மழை காலங்களில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல கடுவங்குடி ஊராட்சி விராலூர் காளியம்மன் கோவில் தெரு சாலையும் மிகவும் மோசமாக உள்ளது. எனவே இந்த 2 சாலைகளையும் சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவைபெற்றுக் கொண்ட மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கடுவங்குடி ஊராட்சி வடக்குத்தெரு, காளியம்மன் கோவில் தெரு சாலைகளை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.


Next Story