பெண் போலீசாரை கிண்டல் செய்த அதிரடி வாலிபர் கைது


பெண் போலீசாரை கிண்டல் செய்த அதிரடி வாலிபர் கைது
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 3:53 PM IST)
t-max-icont-min-icon

பாஞ்சாலங்குறிச்சியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசாரை கிண்டல் செய்த வாலிபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்படி மணியாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு லோகேஸ்வரன் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

பாஞ்சாலங்குறிச்சி சந்ததியர் குடியிருப்பில் நடந்த விழாப்பகுதியில் ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுருந்தனர். இதில் பெண் போலீசாரை மதுபோதையில் இருந்த அப்பகுதியை சேர்ந்த லட்சுமணபெருமாள் மகன் சுரேஷ்குமார் (வயது 29) என்பவர் கிண்டல் செய்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் போலீஸ்காரர் கொடுத்த புகாரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.


Next Story