கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் நடிகர் சிங்கமுத்து சாமி தரிசனம்
கொடுமுடி மகுடேசுவரர் கோவிலில் நடிகர் சிங்கமுத்து சாமி தரிசனம்
ஈரோடு
கொடுமுடி
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மிகவும் பழமையான மகுடேசுவரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. காவிரி கரையில் அமைந்துள்ள இக்கோவிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன. மேலும் சிறந்த பரிகார தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது.
இந்தநிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து நேற்று கொடுமுடி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.
முதலில் மகுடேசுவரரையும், வீரநாராயண பெருமாளையும் தரிசனம் செய்த அவர் பின்னர் பிரம்மா, மகாலட்சுமி, ஆஞ்சநேயர், வடிவுடை நாயகி, நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், காலபைரவர் மற்றும் சனிபகவான் சன்னதிக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த சிங்கமுத்துவுடன் பக்தர்கள் பலர் செல்பி எடுத்துக்கொண்டார்கள்.
Related Tags :
Next Story