நடிகர் அஜித் பட பாடல் விவகாரத்தில் கோவில் விழாவில் மோதல்; 11 பேர் கைது
கிருஷ்ணகிரி
பர்கூர்:-
பர்கூரை அடுத்த எம்.ஜி.ஆர்.நகர் பகுதி மக்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை கொண்டாடினர். அப்போது கலைநிகழ்ச்சிகள் நடந்தது. பர்கூரை அடுத்த பூமலை நகர் பகுதியை சேர்ந்த சரண் (வயது 22) என்பவர் கலைநிகழ்ச்சியின் போது நடிகர் அஜித்குமார் பாடலை போட சொன்னதாக தெரிகிறது. அதற்கு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மணிகண்டன், ஆனந்த் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் சரண் தாக்கப்பட்டார். மேலும் இரு தரப்பாக மோதிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சரண் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் விசாரணை நடத்தி மணிகண்டன், ஆனந்த் உள்பட 3 பேரை கைது செய்தனர். அதேபோல் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் சரண் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story