தியேட்டரில் படம் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள் என நடிகர் அருண்விஜய், டைரக்டர் ஹரி ஆகியோர் தெரிவித்தனர்


தியேட்டரில் படம் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள் என நடிகர் அருண்விஜய், டைரக்டர் ஹரி ஆகியோர் தெரிவித்தனர்
x

எத்தனை ஓ.டி.டி. தளங்கள் வந்தாலும், தியேட்டரில் படம் பார்க்கவே மக்கள் விரும்புகிறார்கள் என நடிகர் அருண்விஜய், டைரக்டர் ஹரி ஆகியோர் தெரிவித்தனர்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

திரைப்பட டைரக்டர் ஹரி இயக்கத்தில், நடிகர் அருண்விஜய் நடித்த 'யானை' திரைப்படம் வருகிற 15-ந் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் காட்சிகளை காண தூத்துக்குடிக்கு நடிகர் அருண் விஜய், டைரக்டர் ஹரி ஆகியோர் வந்தனர்.

அப்போது, அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா கால கட்டத்துக்கு பின் மக்கள் தியேட்டர்களில் திரைப்படங்களை பார்ப்பதற்கு விரும்புகின்றனர். அதிக அளவில் தியேட்டர்களுக்கு வருகின்றனர். ஒரு படம் வெளியிடுவதற்கு அந்த படக்குழுவினர் படும் கஷ்டங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் எத்தனை ஓ.டி.டி. தளங்கள் வந்தாலும் நல்ல படங்களை தியேட்டர்களில் பார்க்கவே மக்கள் விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story