பழனி முருகன் கோவிலில் 'புஷ்பா' பட வில்லன் நடிகர் சுனில் சாமி தரிசனம் தரிசனம்
பழனி முருகன் கோவிலில் ‘புஷ்பா' பட வில்லன் நடிகர் சுனில் சாமி தரிசனம் தரிசனம் செய்தார்.
'புஷ்பா' படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சுனில். இவர் இன்று பழனிக்கு வந்தார். பின்னர் ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் முருகப்பெருமானை தரிசித்து வழிபாடு செய்தார். அதைத்தொடர்ந்து ரோப்கார் மூலம் அடிவாரம் பகுதிக்கு வந்த சுனிலுடன் சேர்ந்து நின்று பக்தர்கள் தங்களின் செல்போன்களில் 'செல்பி' எடுத்து மகிழ்ந்தனர். மேலும் நடிகர் சுனிலும் அடிவாரம் பகுதியில் உள்ள 'நம்ம பழனி' என்ற செல்பி ஸ்பாட்டில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் 'வள்ளிமயில்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில் விஜய்ஆண்டனி, சத்யராஜ், நான் உள்பட பலர் நடிக்கிறோம். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல், பழனி பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்காக திண்டுக்கல் பகுதிக்கு வந்தால், எப்படியும் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி இன்று (அதாவது நேற்று) வந்து சாமி தரிசனம் செய்தேன் என்றார்.