தமிழ் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - சீமான் பெருமிதம்
தமிழ் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின் உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர். வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்திய கலை உலகச் சிற்பி.
தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர்களினுடைய பிறந்தநாளில் அந்த மகத்தான மேதைக்கு பெருமையோடு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story