நடிகர் வையாபுரி விடுதலை


நடிகர் வையாபுரி விடுதலை
x

தேர்தல் பிரசாரத்தின்போது, ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த வழக்கில் நடிகர் வையாபுரி விடுதலை செய்யப்பட்டார்.

தேனி

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நகைச்சுவை நடிகர் வையாபுரி போடியில் பிரசாரம் செய்தார். அப்போது போடி புதூர் பகுதியில், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை, போடி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையொட்டி நடிகர் வையாபுரி கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமயில், நடிகர் வையாபுரி மீதான குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரம் இல்லை எனக்கூறி வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.


Next Story