கள்ளக்குறிச்சி பகுதியில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா


கள்ளக்குறிச்சி பகுதியில்  நடிகர் விஜய் பிறந்தநாள் விழா
x

கள்ளக்குறிச்சி பகுதியில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்க இளைஞர் அணி, ஒன்றிய தலைமை மற்றும் ஒன்றிய இளைஞர் அணி சார்பில் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பரணி பாலாஜி வழிகாட்டுதல்படி கள்ளக்குறிச்சி ஒன்றியம் ஆலத்தூர் கிராமத்தில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி ஒன்றிய தலைவர் வரதன், ஒன்றிய செயலாளர் திலீப் குமார் மற்றும் தெற்கு ஒன்றிய இளைஞரணி தலைவர் சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அரவிந்த் வரவேற்றார். விழாவையொட்டி ஆலத்தூர் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

அதன்பிறகு விஜய் மக்கள் இயக்க கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட இளைஞரணி, ஒன்றிய தலைமை, ஒன்றிய இளைஞரணி சார்பாக அனைத்து கிராமங்களிலும் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய இளைஞரணி பொருளாளர் மணி, தெற்கு ஒன்றிய இளைஞரணி துணை தலைவர் குணசேகர், ஒன்றிய துணைத்தலைவர் சிலம்பரசன், வடக்கு ஒன்றிய இணை செயலாளர் சுந்தர் ராஜ், வடக்கு ஒன்றிய இணை செயலாளர் சிவகாந்தன், தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் பெத்தன்ராஜ், இணையதள பிரிவு பிகில் பாரத் மற்றும் கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story