பெண்ணாடம், சிதம்பரத்தில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா


பெண்ணாடம், சிதம்பரத்தில்  நடிகர் விஜய் பிறந்தநாள் விழா
x

பெண்ணாடம், சிதம்பரத்தில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கடலூர்

பெண்ணாடம்,

மாணவர்களுக்கு நோட்டு-புத்தகங்கள்

நடிகர் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அறிவுறுத்தலின் பேரிலும், கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், கடலூர் மேற்கு மாவட்ட மாணவரணி தலைவர் அப்பாஸ் அலி ஆலோசனையின்பேரிலும் பெண்ணாடம் நகர மாணவரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடிகர் விஜய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் பெண்ணாடம் நகர மாணவரணி சார்பில் மாணவர்களுக்கு நோட்டு-புத்தகங்கள், பேனா மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட மாணவரணி நிர்வாகிகள் ஸ்டாலின், ஆனந்த், பெண்ணாடம் நகர மாணவரணி தலைவர் பிரவீன், செயலாளர் அரவிந்த், பொருளாளர் விக்னேஷ், துணைத் தலைவர் தியாகு மற்றும் நிர்வாகிகள் அரவிந்த், முத்தமிழ் செல்வன், பிரவீன், கதிர்வாணன், முத்து, ரஞ்சித், ரகுமான், அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

கடலூர் தென்கிழக்கு மாவட்ட தொண்டரணி தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழா சிதம்பரத்தில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாவட்ட தொண்டரணி தலைவர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் கென்னடி, மாவட்ட தொண்டரணி செயலாளர் விஜய்குரு, மாவட்ட தொண்டரணி பொருளாளர் விக்கி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர செயலாளர் விவேக், மாவட்ட தொண்டரணி துணைத்தலைவர் பிரித்திவ்ராஜ், தொண்டரணி விக்னேஷ், அன்னபெட்டகம் சுதாகர், ரஞ்சித்குமார், அரவிந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர், விழாவையொட்டி படித்துறையிறக்கம் அருகே உள்ள அன்னபெட்டகத்தில் 200-க்கும் மேற்பட்ட ஏழை எளியோர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நடிகர் விஜய் பெயரில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.


Next Story